தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் சிம்ஹா, ஸ்ரீ ராமராஜ்ஜியம் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்தவர் நயன்தாரா. அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதோடு, ஸ்ரீ ராமராஜ்ஜியம் நயன்தாராவுக்கு நந்தி விருது பெற்றுக்கொடுத்தது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் அவர் பாலகிருஷ்ணாவின் 102வது படத்தில் இணைகிறார்.
ஜெய சிம்ஹா என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறுகிறதாம்.
மேலும், இதற்கு முன்பு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஆதவன் படத்தில் நடித்துள்ள நயன்தாராவுக்கு இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதோடு, தெலுங்கில் தயாராகும் இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்களாம். இந்த படத்தில் பாலகிருஷ்ணா, நயன்தாரா ஜோடியுடன், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, பிரேமானந்தம், முரளிமோகன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment