அசாமைச் சேர்ந்த பிரபல நடிகை, பிதிஷா பெஸ்பருவாவின் உடல், குர்கானில் உள்ள அவரது வீட்டில், துாக்கில் தொங்கிய நிலையில்மீட்கப்பட்டது. இதையடுத்து, பிதிஷாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர், பிதிஷா பெஸ்பருவா (வயது 30). பிரபல, டிவி சேனல்களில், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள இவர், ஜக்கா ஜாசூஸ் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். பிதிஷா, நிதிஷ் என்பவரை காதலித்து, திருமணம் செய்தார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வந்த பிதிஷா, சமீபத்தில் ஹரியானா மாநிலம் குர்கானில் வாடகை வீட்டில் குடியேறினார். நேற்று முன்தினம் மாலை, பல முறை முயன்றும், பிதிஷாவை போனில் தொடர்பு கொள்ள முடியாததால், அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, போலீசில் புகார் அளித்தார்.
பிதிஷாவின் வீட்டிற்கு சென்ற போலீசார், உட்புறமாக தாழிடப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்குள்ள அறையில் பேனில், துாக்கில் தொங்கிய நிலையில் இருந்த பிதிஷாவின் உடலை மீட்டனர். அந்த அறையில், தற்கொலை குறிப்பு ஏதும் கிடைக்காததால், பிதிஷா கொலை செய்யப்பட்டு, துாக்கில் தொங்க விடப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
பிதிஷாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் நிதிஷை, போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment