Ads (728x90)

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பில் தனுஷ், அமலா பால், கஜோல் மற்றும் பலர் நடிக்க விரைவில் வெளியாக உள்ள படம் 'வேலையில்லா பட்டதாரி 2'. இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஒரு மாதத்திற்குள்ளாக யு டியூபில் 1 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

தனுஷ் நடித்துள்ள ஒரு படத்தின் டிரைலர் முதன் முறையாக 1 கோடி பார்வைகளைப் பெறுவது இதுவே முதல் முறை. பேஸ்புக்கில் 55 லட்சம் பார்வைகைளைப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தப் படத்தின் தெலுங்கு டிரைலர் 64 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, மொத்தமாக 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

பொதுவாக ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்களின் டிரைலர், டீசர் ஆகியவைதான் 1 கோடி பார்வைகளைக் கடப்பது வழக்கம். இப்போது அந்த சாதனையை தனுஷும் புரிந்திருக்கிறார்.

யு டியூபில் முதன் முதலாக மிகப் பெரும் சாதனையைப் புரிந்தது தனுஷ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் யு டியுபில் அவருடைய 'கொலை வெறி' பக்கத்திற்குப் போனால் யாராவது வந்து அந்தப் பாடலைப் பார்த்து ரசித்து கமெண்ட் போட்டுவிட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். 'கொலை வெறி' பாடல் 12 கோடியே 55 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget