'36 வயதினிலே' படத்தின் மூலம் தமிழிலும் அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் தற்போது மலையாளத்தில் நிவின்பாலியை வைத்து 'காயங்குளம் கொச்சுண்ணி' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் நடிக்கவுள்ளார் என்கிற தகவல் இப்போது கசிந்துள்ளது. இதற்குமுன், அதாவது இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'மிலி' என்கிற படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்போது 'காயங்குளம் கொச்சுண்ணி'க்காக மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
எண்பதுகளில் நிஜமாகவே வாழ்ந்த மிக பயங்கர கொள்ளையனான 'காயம்குளம் கொச்சுண்ணி' என்பவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் இந்தப்படத்தில் படமாக்கவுள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். காயம்குளம் கொச்சுண்ணி, கேரளா பார்டரை விட்டு தாண்டிவந்து தமிழக எல்லைப்பகுதியில் திருடுவதில் பெயர்போனவராம். அதிலும் களரி சண்டையில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பார்கள். அதனால் இந்த கேரக்டரில் நடிக்கும் நிவின்பாலியும் இந்தப்படத்திற்காக களரி சண்டை பயிற்சியெல்லாம் கற்றுக்கொண்டுள்ளாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment