நடிகர் சங்கத்தின் இன்னாள் பொதுச் செயலாளர் விஷாலும், முன்னாள் தலைவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் பால்ய பருவத்தில் இருந்து நண்பர்கள். தற்போது இருவரும் தீவிரமாக காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள். இது இதுவரை வெறும் கிசுகிசு செய்தியாகவே இருந்து வந்தது. சந்தானம் ஒரு படத்தில் "நீ கல்யாணம் செய்துக்க போறது..... லட்சுமியையா, லட்சுமி....." என்று கேட்பார். அதாவது லட்சுமிமேனனா, வரலட்சுமியா என்று கேட்பார்.
இந்த நிலையில் நேற்று விஷால் நடித்து தயாரிக்கும் துப்பறிவாளன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் நந்தகோபால் பேசும்போது "விஷால் காமராஜர் மாதிரி மக்களுக்கு சேவை செய்கிறார்" என்றார். அதைத் தொடர்ந்து பேசியவர்கள் "விஷால் காமராஜர் போன்று சேவை செய்தால் போதும் அவர் போன்று திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டாம்" என்றார்கள்.
பின்னர் பேச வசந்த விஷால் "என்னை இங்கு காமராசருடன் ஒப்பிட்டு பேசினார்கள். நானெல்லாம் அவர் பக்கத்தில்கூட நிற்க முடியாது என்றாலும் அவர் போன்று தன்னலமில்லாமல் உழைப்பேன். ஆனால் அவர் மாதிரி திருமணம் செய்யாமல் இருக்க மாட்டேன். எனக்கும் கல்யாணம் நடக்கும். நான் காமராசர் மாதிரி வாழப்போகிறேன் என்று சொன்னால் அதை கேள்விப்பட்டு என் அப்பா இங்கே ஓடிவந்து விடுவார்.
அம்மா ஷாக்காயிடுவாங்க. அப்புறம் லட்சுமிகரமான நடிகைகள் மன்னிக்கவும் ஒரே நடிகைதான். அந்த லட்சுமிகரமான நடிகை சண்டைக்கு வருவார். அதனால் திருமணம் செய்து கொள்வேன்" என்றார். விஷால் லட்சுமிகரமான நடிகை என்று குறிப்பிட்டது. வரலட்சுமியை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment