யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவம் போன்ற போதைப்பொருள்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் இணைந்த நிகழ்வுகள் துயர்மிக்கவை. இவ்வாறு தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பாணந்துறை நகர சபை விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ‘போதைப்பொருட்களற்ற நாடு’ தேசிய செயற் திட்டத்தின் களுத்துறை மாவட்ட நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்தாவது-;
இவ்வாறான அச்சம் மிகுந்த – போதைப்பொருள்களுடன் தொடர்பான பல குற்றச்செயல்கள் கடந்த காலங்களில் நாட்டில் நடந்துள்ளன. அவ்வாறான அசாதார நிகழ்வுக ளுக்கு இனி இடமளிக்க முடியாது. போதைப்பொருள் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களைப் பாராட்டுவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட வரப் பிரசாதங்களை வழங்கவும், பதவி ஏற்றத்தின்போது விதந்துரைகளை வழங்கவும் பொருத்தமான திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
போதைப்பொருள்களற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய செயற் திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் மேலதிக செயற்பாடுகள் பல எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும். போதைப்பொருள்கள் தொடர்பாக சமூகத்தில் காணப்படும் கசப்பான அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கக் கூடாது.
நாட்டையும், சமூகத்தையும் போதைப்பொருளின் பிடியிலிருந்து விடுவிப்ப தற்கு பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.- என்றார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘போதைப் பொருட்களற்ற நாடு’ செயற் திட்டத்து டன் இணைந்ததாக நடைபெறும் மாவட்ட மீளாய்வு செயற்திட்டத் தொடரின் ஒன்பதாவது நிகழ்வே பாணந்துறை நகர சபை விளையாட்ட ரங்கில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக கம்பஹா, காலி, கேகாலை, கொழும்பு, குருநாகல், நுவரெலியா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 8 மாகாணங்களில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் புகையிலை நிறுவனங் களின் செயற்பாடுகளை அவதானிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட் டுள்ள புகையிலை ஆய்வு நிலையத்தின் இணையத்தளமும் அரச தலைவரால் ஆரம்பிக்கப்பட்டது.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க, மேல் மாகாண அமைச்சர் காமினி திலக்கசிறி உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்களும், களுத்துறை மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களும், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் பிர தானிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment