புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரணை நடத்தும் தீர்ப்பாயம் முன்னிலையில் சாட்சிய மளிக்க ஊர்காவற்றுறை நீதிவானுக்கு நேற்று அழைப்பாணை விடுக்கப்பட்டது.
எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப. 2 மணிக்கு அவரது சாட்சியப் பதிவு இடம்பெறும் என்று தீர்ப்பாயம் அறிவித்தது.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வின் பின் கோரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் இடம்பெற்று வருகிறது.
மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாய அமர்வின் 8ஆம் நாள் சாட்சியப் பதிவுகள் நேற்றுக் காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் 2ஆவது மாடியிலுள்ள திறந்த மன்றில் கூடியது.
வழக்குத் தொடுனர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி பி. குமாரரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகள் நாகரத்தினம் நிஷாந்த், லக்சி டீ சில்வா மற்றும் மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
1ம் ,2ம் , 3ம் , மற்றும் 6ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாம் மற்றும் சட்டத்தரணி லியகே ஆகியோரும் 5ஆம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
அத்துடன் 8ஆம் எதிரி சார்பிலும் தீர்ப்பாயத்தால் ஒன்று தொடக்கம் 9 வரையான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலையாகினார்.
பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் தீர்ப்பாயத்தில் முற்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கின் 49ஆவது சாட்சியமான ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவானை எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறும் அன்றைய தினம் வழக்கின் 52ஆவது சாட்சியமான இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தின் மூத்த அதிகாரியையும் மறுநாள் 53ஆவது சாட்சியமான ஜின்டெக் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியையும் சாட்சியமளிக்க தீர்ப்பாயத்தில் முன்னிலையாக அழைப்பாணை விடுக்குமாறு பிரதி மன்றாடியார் அதிபதி விண்ணப்பம் செய்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம் சாட்சிகளுக்கான அழைப்பாணையை அனுப்பி வைக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றப் பதிவாளருக்குக் கட்டளையிட்டது.
அதனை தொடர்ந்து வழக்கின் 41ஆவது சாட்சியமான கொடிகாமம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சிந்தக்க நிஷாந்த பிரிய பண்டார சாட்சியமளித்தார்.
“சம்பவம் நடைபெற்ற காலப் பகுதியில் நான் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்தேன். 2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி மூத்த பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் வீரசேகர, யாழப்பாண நகரில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாகவும் , அதனால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக யாழ்ப்பாணம் வருமாறு என்னை அழைத்திருந்தார்.
அதன் பிரகாரம் நான் யாழ்ப்பாணம் வந்தேன். அப்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலை மீது போராட்டகாரர்கள் தாக்குதல் நடாத்துவதாகவும் , அதனைக் கட்டுப்படுத்த அங்கே செல்லுமாறு எனக்குப் பணிக்கப்பட்டது. அதனை அடுத்து நான் அங்கே சென்றிருந்தேன். அங்கே இடம்பெற்ற தாக்குதல் காரணமாக எனது கைகளில் காயங்கள் ஏற்பட்டன.
அதனால் நான் அங்கிருந்து விலகி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். அன்றைய தினம் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றேன். மறுநாள் (21ஆம் திகதி ) காலை 7.30 மணியளவில் என்னைத் தனது அலுவலகத்துக்கு வருமாறு மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பணித்தார்.
அதனையடுத்து நான் வைத்தியசாலையிலிருந்து அவரது அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் உள்ளார் எனவும் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மூத்த பொலிஸ் அத்தியட்சகர் எனக்குப் பணித்தார்.
அதன் பிரகாரம் நான் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தேன். விசாரணைகள் ஊடாக, அவர் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என அறிந்து கொண்டேன். அவர் மீது மாணவி கடத்தல், வன்புணர்வு மற்றும் கொலை ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டன. அது தொடர்பான முதல் அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்தேன்.
அத்துடன் சந்தேகநபரை பிணையில் விடுவித்தால் கலவரங்கள் ஏற்படலாம் , சந்தேகநபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும், சந்தேக நபர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளமையால் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு பிணைக் கட்டளை சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு பிணை வழங்க வேண்டாம் என ஆட்சேபனை தெரிவித்தும் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்தேன்” என்று முன்னாள் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சிந்தக்க பண்டார சாட்சியமளித்தார்.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் குறுக்கு விசாரணைகளின் போது,
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் குறுக்கு விசாரணைகளின் போது,
கேள்வி :- உமது விசாரணையின் போது ஒன்பதாவது சந்தேகநபர்தான் சம்பவம் இடம்பெற்ற கால பகுதியில் கொழும்பில் இருந்ததாக தெரிவித்தாரா?
பதில் :- ஆம்.
கேள்வி :- அப்படியாயின் அவர் எப்படி இந்தக் குற்றச்செயலுடன் தொடர்புபட்டார் ?
பதில் :- அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இந்த குற்றச்செயலுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஒன்பதாவது சந்தேகநபர் கொழும்பில் நின்றமைக்கான சாட்சி ஆதாரம் எதுவும் கொடுத்தாரா ? என சாட்சியிடம் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. அதற்கு சாட்சி இல்லை எனப் பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்புச் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் , “நான் ஒன்பதாவது எதிரி தரப்பில் கூறுகிறேன். நீர் மேல் அதிகாரியின் உத்தரவின் பேரில் விசாரணைகள் எதுவும் முன்னெடுக்காமல் , முதல் அறிக்கையைத் தயார் செய்து சந்தேகநபர் சுவிஸ்குமாரை நீதிமன்றில் முற்படுத்தியிருந்தீர் என்று சாட்சியிடம் கேட்டார்.
“அதனை நான் முற்றாக மறுக்கிறேன். நான் விசாரணைகளை முன்னெடுத்தேன்” எனச் சாட்சி தெரிவித்தார்.
முன்னாள் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சிந்தக்க பண்டாரவின் சாட்சிப் பதிவுகள் முடிவுறுத்தப்பட்டு அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சிந்தக்க பண்டாரவின் சாட்சிப் பதிவுகள் முடிவுறுத்தப்பட்டு அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து வழக்கின் 44ஆவது சாட்சியமான , கொழும்பில் உள்ள கசீனோ நிலையம் ஒன்றின் முகாமையாளரான பிரியந்த பஸ்ஸநாயக்க சாட்சியமளித்தார்.
“எமது கசீனோ நிலையத்துக்கு வந்திருந்த குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் ஒருவரின் பெயரை கூறி அவர் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி இங்கு வந்திருந்தாரா ? என கேட்டனர். நான் அவர்கள் கூறிய பெயரைப் பதிவேட்டில் தேடினேன். இல்லை. அங்கத்தவரா? எனத் தேடினேன். அந்த நபர் அங்கத்தவரும் இல்லை.
அதன் பின்னர் அவர்கள் சி.சி.ரி.வி காணொலிப் பதிவுகளைப் பார்த்தனர். அதில் அவர்கள் ஒருவரை அடையாளம் கண்டு கொண்டனர். அந்த நபர் அன்றைய தினம் (13ஆம் திகதி) பகல் வேளை முச்சக்கர வண்டியில் ஒருவருடன் வந்திறங்கி உள்ளே வந்து இருந்தார்.
குற்றத்தடுப்புப் புலனாய்வாளர்கள் முச்சகரவண்டியில் வந்திறங்கிய மற்றுமொரு நபருடனேயே வந்திருந்தனர்” என அவர் சாட்சியமளித்தார்.
அன்றைய தினம் (13ஆம் திகதி) சி.சி.ரி.வி காணொலிப் பதிவுகளை பார்வையிட்டு அடையாளம் கண்டு கொண்ட நபர் எதிரி கூண்டில் நான்காவதாக உள்ளார் (மகாலிங்கம் சசிதரன்) என சாட்சி அடையாளம் காட்டினார். அதனை தொடர்ந்து அவரது சாட்சிப் பதிவுகள் முடிவுறுத்தப்பட்டது.
அதனை அடுத்து வழக்கின் 45ஆவது சாட்சியான ஆறுமுகம் செல்வக்குமார் என்பவர் சாட்சியமளிக்கையில் ,
“நான் கொழும்பில் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வெயிட்டராக உள்ளேன். 13ஆம் திகதி மாலை 5 மணியளவில் ரெஸ்டாரன்ட்க்கு 5 , 6 பேர் வந்தார்கள் அவர்கள் சாராயம் , கொக்ககோல மற்றும் உணவு ஆகியவற்றை வாங்கினார்கள். அங்கே சுமார் 45 நிமிடங்கள் அவர்கள் இருந்தார்கள்.
“நான் கொழும்பில் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வெயிட்டராக உள்ளேன். 13ஆம் திகதி மாலை 5 மணியளவில் ரெஸ்டாரன்ட்க்கு 5 , 6 பேர் வந்தார்கள் அவர்கள் சாராயம் , கொக்ககோல மற்றும் உணவு ஆகியவற்றை வாங்கினார்கள். அங்கே சுமார் 45 நிமிடங்கள் அவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் எதிரி கூண்டில் 7ஆவதாக (பழனி ரூபசிங்கம் குகநாதன் ) உள்ள நபர் அடிகடி அங்கு வருவார். 4 ஆவதாக உள்ள (மகாலிங்கம் சசிதரன் ) நபர் எப்பாவது இருந்துட்ட 7ஆவது நபருடன் வருவார். 9ஆவதாக உள்ள நபர் ( மகாலிங்கம்- சசிக்குமார்) 13ஆம் திகதி அன்றே வந்திருந்தார்.
அவர் தொப்பி அணிந்து வந்து உள்ளே வந்ததும் தொப்பியை மேசை மீது கழற்றிவைத்தார்” என சாட்சியம் அளித்தார்.
அதனை தொடர்ந்து அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.
அதனை அடுத்து வழக்கின் 46ஆவது சாட்சியான இராமையா கனகேஸ்வரன் சாட்சியமளித்தார்.
“நான் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தங்குமிட விடுதி ஒன்றை நடாத்தி வருகிறேன்.
“நான் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தங்குமிட விடுதி ஒன்றை நடாத்தி வருகிறேன்.
எமது தங்குமிடத்தில் தங்குபவர்களின் பெயர் விவரங்களை எடுத்து அவர்களின் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை பிரதி எடுத்தே தங்க அனுமதிப்போம். எமது தங்குமிடத்தில் தங்குபவர்களின் பெயர் விவரங்கள் தினமும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி வைப்போம்.
2015ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி எமது தங்குமிடத்தை வெள்ளவைத்தைப் பொலிஸார் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்துவதாக அங்கு வேலை செய்யும் ஒருவர் எனக்கு அறிவித்தார். நான் உடனே அங்கே சென்றேன்.
அவர்கள் எமது தங்குமிடத்தில் தங்கி இருந்த சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அதன் போது அவருடன் அங்கு தங்கியிருந்த அவரது மனைவி மற்றும் கைக்குழந்தை ஆகியோர் எமது தங்குமிடத்திலையே தங்கியிருந்தனர்.
அப்போது கைது செய்து கொண்டு செல்லப்படும் நபர் அன்றைய தினம் (19ஆம் திகதி) காலையில்தான் வான் ஒன்றில் வந்திறங்கித் தங்கியதாக அங்கு வேலை செய்யும் ஒருவர் தெரிவித்தார்.
அன்றைய தினம் (19ஆம் திகதி) கைது செய்யப்பட்ட சுவிஸ்குமார் என்பவர் தன்னுடன் மேலும் மூவரை அழைத்து வந்து 2015ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான காலப் பகுதியில் எதிரிக்கூண்டில் 4ஆவதாக நிற்கும் (மகாலிங்கம் சசிதரன் ) , 7ஆவதாக நிற்கும் (பழனி ரூபசிங்கம் குகநாதன்) மற்றும் 8 ஆவதாக நிற்கும் (ஜெயதரன் கோகிலன்) ஆகிய நபர்களுடன் எமது தங்குமிடத்தில் தங்கியிருந்தார்கள்.
14ஆம் திகதி ஊரில் ஒரு இறுதிச் சடங்கு இருப்பதாகவும் தாம் ஊருக்கு போகப் போவதாகக் கூறிச் சென்றார்கள். அதன்போது அவர்கள் எமக்கு தங்குமிட வாடகை காசு 12 ஆயிரம் ரூபாய் தர வேண்டும்.
அந்தப் பணத்தை மோதரை என்ற இடத்தில் பெற்றுத்தருவதாகக் கூறி, பணத்தை வழங்க விடுதியில் வேலை செய்யும் ஒருவரைத் தம்முடன் அனுப்புமாறு கோரினார்கள்.
ஒரு பையனை பணத்தை பெற்று வர அவர்களுடன் நானும் அனுப்பினேன். அவர்கள் சிறிது தூரம் சென்று ஆயிரம் ரூபா பணத்தைக் கொடுத்துவிட்டு மிகுதியை எனது பெயரில் வங்கியில் வைப்புச் செய்துவிடுவதாக கூறி அந்தப் பையனை திருப்பி அனுப்பிவிட்டனர்.
எங்கள் தங்குமிடத்திற்கு முன்பாக புங்குடுதீவை சேர்ந்தவர்கள் உணவகம் நடாத்தி வருகின்றார்கள். அவர்கள் 18ஆம் திகதி காலை சொன்னார்கள் “உங்கள் தங்கு மிடத்தில் தங்கியிருந்தவர்கள்தான் , புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்தி , வன்புணர்ந்து , கொலை செய்தவர்கள் “ என இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என்று.
உடனே நான் எனது மருமகனை அழைத்து மடிக்கணியில் இணையத்தளத்தில் அந்த செய்தியைப் பார்த்தேன். அதில் சுவிஸ்குமார் மின் கம்பம் ஒன்றில் கட்டி வைத்து தாக்கப்படும் படம் இருந்தது” எனச் சாட்சியமளித்தார்.
“சாட்சி உங்களுடைய விடுதியிலுள்ள பதிவுப் புத்தக்தை வைத்துத்தானே சந்தேக நபர்கள் தங்கியிருந்த காலப் பகுதியைக் கூறுகின்றீர்கள்? ” சாட்சியிடம் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. அதற்கு சாட்சி, ஆம் என்று பதிலளித்தார்.
”சாட்சி அப்படியாயின் புத்தகத்தில் பதிவு இருந்தாலும் அந்த நபர் விடுதியிலிருந்து வெளியே சென்றிருந்தால் தெரியாதுதானே? என்று தீர்ப்பாயம் மீண்டும் கேள்வியெழுப்பியது. அதற்கு சாட்சி ஆம் என்று பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அதையடுத்து வழக்கின் 51ஆவது சாட்சியான ரஞ்சித் பாலசூரிய சாட்சியம் அளிக்கையில்,
சம்பவம் இடம்பெற்ற கால பகுதியில் நான் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்தேன். மாணவி கொலை வழக்கு தொடர்பில் எமது பொலிஸ் நிலையத்தால் எந்த விசாரணைகளும் முன்னேடுக்கப்படவில்லை.
அதையடுத்து வழக்கின் 51ஆவது சாட்சியான ரஞ்சித் பாலசூரிய சாட்சியம் அளிக்கையில்,
சம்பவம் இடம்பெற்ற கால பகுதியில் நான் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்தேன். மாணவி கொலை வழக்கு தொடர்பில் எமது பொலிஸ் நிலையத்தால் எந்த விசாரணைகளும் முன்னேடுக்கப்படவில்லை.
இருந்த போதிலும் எமது பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமையில் ஒரு சிறப்புப் பொலிஸ் குழுவை மாணவி கொலை வழக்கு தொடர்பில் விசாரணை செய்ய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அமைத்திருந்தார்.
மாணவி கொலை வழக்கு தொடர்பில் சிறிகஜன் எந்த ஒரு சந்தேகநபரையும் கைது செய்து எமது பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தவில்லை.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்ற வகையில் எவரையாவது கைது செய்து பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தினால் எனக்கு அறிவிக்க வேண்டும். ஆனால் மாணவி கொலை வழக்கு தொடர்பில் சிறிகஜன் ஒருவரைக் கைது செய்தார் என்றும் அவர் பின்னர் விடுவிப்பட்டார் என்றும் ஒரு பிரச்சனை நடந்ததாக அறிந்து கொண்டேன்.
சிறிகஜன் புங்குடுதீவில் இருந்து மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை அழைத்து வந்து , சசிக்குமார் என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பின்னர் சட்ட மருத்துவ அதிகாரியிடம் சசிக்குமார் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறியதாக , சிறிகஜன் கூறினார் “சுவிஸ் குமார் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையப் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும்” என்று. “அது தொடர்பில் நீதிமன்ற கட்டளையைப் பெற்று உடன் நடவடிக்கை எடுக்குமாறும் நான் அவருக்குப் பணித்தேன்.
ஆனால் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் சிறிகஜன் எடுக்கவில்லை. 19ஆம் திகதி யாழ்ப்பணத்தில் , போராட்டங்கள் , கடையடைப்பு நடைபெற்றன. 20ஆம் திகதி யாழ்ப்பாண நகர் உட்பட புற நகர் பகுதிகள் எங்கும் போராட்டங்கள் , கடையடைப்பு நடைபெற்றன.
மாணவி கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யபப்ட்ட 5 சந்தேகநபர்களும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் , அவர்களை யாழ்ப்பாண நீதிவான் மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் யாழ்ப்பாண நீதிமன்ற கட்டடத் தொகுதியைச் சூழ்ந்தனர்.
மாணவி கொலை வழக்கில் சட்டம் நீதி காப்பற்றப்பட வேண்டும் எனவும் , சந்தேகநபர் ஒருவரை தப்பி செல்ல உதவியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிளர்ந்தெழுந்த மக்கள் நீதிமன்ற கட்ட தொகுதி , சிறைச்சாலை வாகனம் , யாழ்ப்பாணச் சிறைச்சாலை, யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் மற்றும் யாழ்.நகர் பகுதியில் இருந்த சில கடைகள் மீது கற்களால் வீசி தாக்குதல்களை மேற்கொண்டனர்.
அந்த தாக்குதல் சம்பவம்தொடர்பில் அப்போது 139 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யபப்ட்டது.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 21ஆம் திகதி அதிகாலைதான் சுவிஸ் குமார் எனும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை என்னிடம் பாரம் தந்தார்” என சாட்சியமளித்தார்.
அதனை தொடர்ந்து அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.
அதையடுத்து , பிரதி மன்றாடியார் அதிபதி, இந்த வழக்கின் 47 மற்றும் 48ஆவது சாட்சியங்களை விடுவிப்பதாக தீர்ப்பாயத்தில் விண்ணப்பம் செய்தார். அதனை தீர்ப்பாயம் ஏற்று குறித்த இரு சாட்சியங்களையும் வழக்கிலிருந்து முற்றாக விடுவித்தது.
நேற்றைய வழக்கு விசாரணைகள் மதியம் 12.45 மணியுடன் நிறைவடைந்தது. தீர்ப்பாய அமர்வு இன்று காலை 9 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரையில் சந்தேகநபர்கள் ஒன்பது பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
Post a Comment