Ads (728x90)

துருக்கி நாட்டில் வரலாறு காணாத வகையில் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்ந்ததால் அந்நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரம் உள்பட துருக்கியின் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

குறிப்பாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் மற்றும் சிலிவ்ரி ஆகிய நகரங்களில் இன்'று அதிகாலை முதல் இதுவரை இல்லாத வகையில் கன மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த மழையினால், அந்த பகுதிகள் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 
 
கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். 
 
மேலும் பெரும்பாலான வீடுகளின் தரைத்தளம் நீரில் மூழ்கியுள்ளதால், பொதுமக்கள் வீட்டின் மொட்டை மாடி பகுதியில் கொட்டும் மழையில் நனைந்து தவித்து வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் இவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
 

மேலும் இந்த கனமழையின் போது 6,700 மின்னல்கள் தாக்கியுள்ளதாகவும்,  ஒரு கன சதுர மீட்டருக்கு 65 கிலோகிராம் அளவு மழை பெய்துள்ளதாக துருக்கி வானிலை மையம் அறிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget