Ads (728x90)


ஐதராபாத்: ''கேரள மாநிலம், மலப்புரத்தில், மத மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணை அறிக்கையை, அம்மாநில அரசு சமர்ப்பிக்கவில்லை,'' என, மத்திய உள்துறை இணையமைச்சர், ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்தார். மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஹன்ஸ்ராஜ் அஹிர், தெலுங்கானா தலைநகர், ஐதராபாத்தில் நேற்றுகூறியதாவது:கேரளாவில், முதல்வர்பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, மலப்புரம் மாவட்டம், மத மாற்ற மையமாக திகழ்கிறது. ஒரு மாதத்தில், 1,000 பேர், மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.சமீபத்தில், மலப்புரம் சென்றேன்; அப்போது, மாவட்ட உயரதிகாரி, தலைமை செயலர் ஆகியோருடன், மத மாற்ற விவகாரம் பற்றி பேசினேன். மலப்புரத்தில் நடக்கும் மத மாற்றம் குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, கேரள அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது. இதுவரை, கேரள அரசு அறிக்கை சமர்ப்பிக்க வில்லை. மத மாற்ற விவகாரம் குறித்து விசாரிக்கும்படி, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணையில், உண்மை அம்பலமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget