
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி களத்தடுப்பை தெரிவு செய்தார்.
அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 74 ஓட்டங்கள் சேர்த்தது. 14-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா 44 பந்தில் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு டிக்வெல்லா உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இலங்கை அணி 18.2 ஓவரில் 100 ஓட்டங்கள் தொட்டது. டிக்வெல்லா 65 பந்தில் அரைசதம் அடித்தார்.
அணியின் ஸ்கோர் 139 ஓட்டங்களாக இருக்கும்போது டிக்வெல்லா 64 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
டிக்வெல்லா வெளியேறிய சிறிது நேரத்தில் மெண்டிஸ் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அக்சார் பட்டேல் பந்தில் க்ளீன் போல்டானார்.
தொடர்ந்து வந்த வீரர்கள் எவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டாத நிலையில் 43.2 ஓவர்களில் 216 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. மேத்தீவ் மட்டும் 36 ஓட்டங்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய தரப்பில் அக்ஸர் படேல் 10 ஓவரில் 34 ஓட்டங்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜாதவ் 2, சஹால் 2 விக்கெட் என சுழல் ஜாலம் புரிந்தனர்.
Post a Comment