
சிறுவனின் ராக்கெட் வடிவமைப்புக்காக நன்றி தெரிவித்துள்ள நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தின் பொறியாளர் கெவின் டிரூயின், இந்த ராக்கெட் வடிவமைப்பு சிறந்த விண்வெளி வீரர் ஆவதற்கான தொடக்கம் என கடிதம் எழுதி இட்ரிஸ்-க்கு அனுப்பியுள்ளார். உங்களைப் போன்ற ஆர்வம் உள்ள குழந்தைகளை வரவேற்கிறோம். 110 சதவீதம் உங்களுக்கு நாசாவில் இடம் உண்டு என கடிதத்தில் பதிவிட்டுள்ளார். நாசா அனுப்பிய கடிதத்தின் புகைப்படத்தை இட்ரிஸ்-ன் தந்தை ஜமால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக கிரகங்களை பாதுகாக்கும் அதிகாரி பணிக்கு விண்ணப்பித்த 4-ம் வகுப்பு பயிலும் 9 வயது ஜேக் டேவிஸ் என்ற சிறுவனுக்கு நாசாவின் கிரக ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ஜேம்ஸ் எல். கிரீன் ரால், ஜக் டேவிஸின் உயர்வான எண்ணத்தையும், ஆர்வத்தையும் பாராட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment