Ads (728x90)

 இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் சதமடித்து கைகொடுக்க இந்திய அணி வெற்றியைே நோக்கி செல்கிறது. இலங்கை அணி 216 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி தம்புலாவில் இன்று நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
இலங்கை அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா, குணதிலாக ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த போது குணதிலகா (35) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய டிக்வெல்லா அரைரசதமடித்தார். இவர், 64 ரன்கள் எடுத்த போது கேதர் ஜாதவ் பந்தில் அவுட்டானார். அக்சர் படேல் பந்தில் குசால் மெண்டிஸ் (36) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உபுல் தரங்கா (13), கபுகேதிரா (1), ஹசரங்கா (2), திசாரா பெரேரா (0), மலிங்கா (8), பெர்ணான்டா (0) ஏமாற்றினர்.
இலங்கை அணி 43.2 ஓவரில் 216 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. மாத்யூஸ் (36) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அக்சர் படேல் 3, பும்ரா, சாகல், கேதர் ஜாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (4) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய ஷிகர் தவான், சதமடித்தார். மறுமுனையில் அசத்திய கேப்டன் கோஹ்லி அரைசதமடித்தார்.
இந்திய அணி 23 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்திருந்தது. தவான் (56), கோஹ்லி (101) அவுட்டாகாமல்  இருந்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget