நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை டைரக்டர் ராஜ் குமார் ஹிரானி இயக்கி வருகிறார். இப்படத்தை விது வினோத் சோப்ரா தயாரிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் கவுரவ வேடம் ஒன்றில் நடிக்கிறாராம் நடிகை தபு.
இப்படத்தில் தபு, நடிகை தபு வேடத்திலேயே நடிக்கிறாராம். இப்படத்தில், விழா ஒன்றில் சிறந்த நடிகருக்கான விருதினை சஞ்சய் தத்தாக நடிக்கும் ரன்பீர் கபூருக்கு, நடிகை தபு வழங்குகிறாராம். உண்மையில் 2004 ம் ஆண்டு முன்னாபாய் எம்.பி.பி.எஸ்., படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை சஞ்சய் தத்திற்கு, நடிகை தபு தான் வழங்கினார். சஞ்சய் தத் விருது பெறும் நிகழ்ச்சி இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் தான் தபு, நடிகை தபுவாகவே நடிக்கிறாராம்.
ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மனிஷா கொய்ராலா, பரீஷ் ராவல், தியா மிர்சா, சோனம் கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனராம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment