Ads (728x90)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனுயா, ஆர்த்தி, நமீதா, ஓவியா, ஜூலி ஆகியோரைத் தொடர்ந்து நேற்று காயத்ரி ரகுராம் வெளியேற்றப்பட்டார். நேயர்கள் அளித்த வாக்குகளோடு வீட்டில் இருப்பவர்கள் அபிப்ராயத்தின்படியும் அவர் வெளியேற்றப்பட்டார். நேயர்களின் கணிசமான வாக்கு காயத்ரிக்கு எதிராக இருந்தது.

வெளியேறிய காயத்ரிக்கு கமல் நிறைய அட்வைஸ் கொடுத்தார். "கெட்ட வார்த்தைகள் பேசாதீர்கள், மற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்" என்றார். ஓவியா வெளியேறியபோது சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள், காயத்ரி வெளியேறியபோது கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

தான் வெளியேறியது பற்றி காயத்ரி கூறும்போது: நான் கொஞ்சம் முன்கோபக்காரி தான். அதனால் என்னை இந்த நிகழ்ச்சிக்கே அனுப்ப வீட்டில் மறுத்தார்கள். வெளியேறும் கடைசி நாளில் தான் இந்த நிகழ்ச்சி பற்றி முழுமையாக புரிந்து கொண்டேன். நான் யாரையும் மனதால் காயப்படுத்தவில்லை. கோபத்தில் ஏதாவது சொல்லியிருப்பேன்.

ஓவியோ மீது எனக்கு அன்பு அதிகம். அவர் வெளியேறியதற்காக பிக்பாஸ் வீடே வருந்தியது. அவரை அந்த வீடே மிஸ் பண்ணியது. இன்னொரு முறை பிக் பாஸ் வீட்டுக்குள் வர மாட்டேன். அனுபவம் ஒரு முறை இருந்தால் தான் ரசிக்க முடியும். என்னை நான் புரிந்து கொள்ளவும், மற்றவர்களை புரியவும் இந்த நிகழ்ச்சி உதவிகரமாக இருந்தது என்றார் காயத்ரி.

Post a Comment

Recent News

Recent Posts Widget