ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தினர் மத்தள விமான நிலையத்துக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்து இன்றைய தினம் முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விமான நிலையத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
நஷ்டத்தில் இயங்கி வரும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய உள்ளதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment