உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது என அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளின் தேர்தலை ஒரேநாளில் நடத்துவதற்கு ஏதுவான 20ம் திருத்தச் சட்டமூலம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் இன்றைய விவாதம் இடம்பெறும்.
இந்த விவாதம் இன்று முழுநாள் விவாதமாக இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது முன்வைக்கப்படுகின்ற சீர்த்திருத்தங்களையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment