Ads (728x90)

கடந்த 2007-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய "குரு" படத்தில் இணைந்து நடித்தனர் மாதவனும், ஐஸ்வர்யா ராயும். இப்போது மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். அதுல் மஞ்ச்ரேக்கர், "பேனி கான்" என்ற படத்தை இயக்க உள்ளார்.

இதில், ஐஸ்வர்யா ராய், அனில் கபூர் நடிக்க உள்ள நிலையில், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக அக்ஷ்ய் ஓபராயை நடிக்க கேட்டனர். ஆனால் அவர் நடிக்க மறுக்கவே இப்போது அந்த ரோல் மாதவனிடம் சென்றிருக்கிறது. மாதவனிடமும் பேசி சம்மதம் வாங்கிவிட்டார்கள். விரைவில் பட்பபிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரலில் பேனி கான் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget