Ads (728x90)

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ்குமார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது விடுதலைப்புலி பிரபாகரன் சம்பந்தப்பட்ட ஒக்கடு மிகிலாடு என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் தயாராகியுள்ள அந்த படத்தை நான் திரும்ப வருவேன் -என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இலங்கையில் நடந்த இறுதிப்போரை மையப்படுத்தி பல படங்கள் வந்தபோதும், அந்த படங்களில் சொல்லப் படாத பல உண்மைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.

இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தபோது, இந்த நிகழ்ச்சிக்கு சிம்பு வருவதாக இருந்தது. ஆனால் அவர் ஒரு படப்பிடிப்புக்கு சென்று விட்டார் என்று கூறினார் மஞ்சு மனோஜ்குமார். மேலும், தான் அணிந்திருந்த கண்ணாடியை காண்பித்து, இது சிம்புவோட கண்ணாடி தான். ஒருமுறை அவர் ஐதராபாத்திற்கு வந்திருந்தபோது இதை அவருக்கு தெரியாமல் திருடி விட்டேன். இந்த பிரஸ்மீட்டிற்கு வரும்போது கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் வரவில்லை என்று ஜாலியாக சொன்னபடி அந்த கண்ணாடியை ஸ்டைலாக அணிந்து கொண்டார் மஞ்சு மனோஜ்குமார்.

மஞ்சு மனோஜ் நடித்த என்னை தெரியுமா? என்ற படத்தில் ரஜினியின் தண்ணி கருத்துருச்சி -என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தனர். அந்த பாடலை சிம்பு பாடியிருந்தார். அதிலிருந்து சிம்புவும், மஞ்சு மனோஜ்குமாரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget