பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைக்கு அமைய இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இதற்காக வேண்டி குறித்த போத்தல் வீச்சு, கல் வீச்சு காட்சிகள் பதிவாகியிருக்கும் சி.சி.ரி.வி. காணொளிகளை பொலிஸார் பரீட்சித்து வருவதாகவும், இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட குறித்த ரசிகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.
இதனிடையே இன்று நடை பெறவுள்ள இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேச போட்டிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாலிய சில்வா ஆகியோரின் மேற்பார்வையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கலகமடக்கும் பொலிஸார் மைதானத்தில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் சீருடையிலும் சிவில் உடையிலும் பொலிஸார் ரசிகர்களுடன் ரசிகர்களாக இருந்தும் கடமைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
இதன் போது விரும்பத்தகாத நடவடி க்கைகளில் ஈடுபடும் ரசிகர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவுள்ளதாக தெரிகிறது.
Post a Comment