Ads (728x90)

டைம்கெட்டில் என்ற சீன நிறுவனம் உடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு வேறு மொழி பேசும் நபர்கள் டபிள்யூ டீ டூ (WT2) என்ற புளூடூத்தை காதில் மாட்டிக் கொள்கின்றனர்.

ஐ.ஓ.எஸ் கொண்ட ஆப்பிள் போன் அல்லது ஐ பேடில், டைம் கெட்டிலின் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து உரையாடும் இருவரும் தங்கள் மொழியைப் பதிவு செய்து கொள்கின்றனர்.

அவர்கள் பேசத் தொடங்கிய மூன்று விநாடி இடைவெளியில், உரையாடலை மொழிமாற்றம் செய்து புளூடுத் தெரிவிக்கிறது. இதனால், வெளிநாடு செல்வோருக்கு மொழிப் பிரச்சனை இருக்காது என்று டைம்கெட்டில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொழிமாற்றம் செய்வதற்கு ஆகும் நேர இடைவெளியை, மூன்று வினாடியில் இருந்து ஒரு விநாடியாகக் குறைக்க உள்ளதாகவும், ஆங்கிலம், சீன, ஸ்பானிய, ஜப்பானிய மொழிகளோடு மேலும் பல மொழிகள் இணைக்கப்படவுள்ளதாகவும் அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget