தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் மீதான பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிக்கு கடும் மிரட்டல் வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் மீது, அவரது ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் அனுப்பிய மொட்டை கடிதம் தான் பிரச்னைக்கு ஆரம்பம். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க, 2002ல் பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன் பிறகு, 2007 ம் ஆண்டு, சி.பி.ஐ., அமைப்பின் டி.ஐ.ஜி., முலிஞ்சா நாராயணன் என்பவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை விசாரிக்க துவங்கினார். பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நாராயணன் அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து கூறியதாவது:
இந்த வழக்கை நான் விசாரிக்க தொடங்கியதுமே, எனது உயர் அதிகாரி என் அறைக்கு வேகமாக வந்தார். 'சாமியார் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடத்த கூடாது. வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என, கூறினார். ஆனால், அதற்கு நான் கட்டுப்படவில்லை. இந்த வழக்கு நீதிமன்றம் மூலம் என் கைக்கு வந்துள்ளது என்பதை மட்டும் அவருக்கு நினைவுப்படுத்தினேன். அதற்கு அடுத்த கட்டத்தில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பல எம்.பி.,க்கள் அரசியல்வாதிகள் சி.பி.ஐ., தலைமை அலுவலகத்திற்கு வந்து என்னிடம், இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என்று கூறினர். அப்போதும் நான் நெருக்கடிக்கு வளைந்து கொடுக்கவில்லை. அத்துடன் தேரா சச்சா சவுதா அமைப்பினரும் என்னை மிரட்ட தொடங்கினர்.
மொட்டை கடிதத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த வழக்கு போடப்பட்டது. அதனால் அந்த கடிதத்தை எழுதியது யார் என்பதை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹாேசியார்பூர் என்ற இடத்தில் இருப்பது தெரிய வந்தது. சம்பவம் நடந்தது, 1999ம் ஆண்டு. அதன் பின் அந்த பெண் ஆசிரமத்தை விட்டு வெளியேறி, திருமணமும் செய்து கொண்டு வந்து விட்டார்.
விசாரணைக்கு ஒத்துழைக்க அப்பெண்ணை சம்மதிக்க வைக்க மிகுந்த போராட்டம் நடத்தினோம். நான் அந்த பெண்ணிடமும், அவரின் உறவினர்களிடமும் ஒரு தந்தை போல் பழகினேன். விசாரணைக்கு ஒத்துழைக்க ஒப்புக் கொண்ட அப்பெண், வாக்குமூலம் அளித்ததுடன், நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியமும் அளித்தார். அப்பெண் அளித்த வாக்குமூலத்தை ஒரு மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்தோம். எனவே தான், வழக்கு விசாரணையின் போது எதிர் தரப்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த சாட்சியங்களையும் சாமியாரின் ஆதரவாளர்கள் மிரட்டினர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment