முதல்வர் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்த நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தார் . எம்எல்ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அண்ணா பல்கலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க கவர்னர் சென்னைவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில், கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. கவர்னர் அனுமதி வழங்கினால், அவரை சந்திப்போம் என திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment