Ads (728x90)

வீட்டின் ஒரு பகுதி மிகவும் பாழடைந்த நிலையிலேயே இருக்கிறது. அங்கு துர்தேவதைகள் குடியேறுவதை எவ்வாறு தவிர்க்கலாம்? பொதுவாக வீட்டின் அனைத்து பகுதிகளையும் சுத்தமாக, வைத்துக் கொள்வதே சிறந்தது. ஆனால் நிதிப்பற்றாக்குறை அல்லது சொத்துத் தகராறு காரணமாக வீட்டின் ஒருபகுதி பயன்படுத்தப்படாமல் பாழடைந்து விடுவது வழக்கத்தில் உள்ளது.

அப்பகுதியை அப்படியே அடைத்து வைக்காமல் பசுவின் சாணத்தால் மெழுகுவது நல்லது. தினசரி மெழுக வேண்டும் என்று அவசியம் இல்லை. வாரம் ஒருமுறை அப்பகுதியை சுத்தம் செய்து பசுஞ்சாணத்தால் அதனை மெழுகினால் போதும். அத்தோடு அங்கு சிறு கோலமிட்டு ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வீட்டின் ஒரு பகுதியை பயன்படுத்தாமல் வைத்திருப்பது, நம் உடலின் ஒரு பாகத்தை பயன்படுத்தாமல் வைத்திருப்பதற்கு சமமாகும். இது நோய்க்கு அறிகுறியாக அமைந்து விடும். பாழடைந்த வீட்டில் லக்ஷ்மி கடாட்சமும் இல்லாமல் போய்விடும்.

எனவே, வீட்டில் எந்தப் பகுதியையும் பாழடைந்த நிலையில் வைத்திருக்கக் கூடாது. அதனைப் பராமரித்து, பயன்படுத்த வேண்டும். மேற்கூறிய செலவில்லாத, எளிய பரிகாரங்களை செய்தன் மூலம் வீட்டை புதுப்பிப்பதற்கான நிதிவசதியும் கிடைக்கும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget