அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, "பட்டத்து யானை" படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானார். அந்தப்படம் சரியான வரவேற்பை பெறாததால் ஐஸ்வர்யாவுக்கு அடுத்த வாய்ப்பு அமையவில்லை. இதனால் மகளுக்காக அர்ஜுனே ஒரு படத்தை தயாரித்து, இயக்குகிறார். சொல்லிவிடவா என்ற அந்தப் படம் தமிழ் மற்றும் கன்னட மொழியில் தயாராகிறது.
ஒரு ஆணும், பெண்ணும், தங்களுடைய வேலையில் உள்ள ஆபத்துகளையும், நெருக்கடிகளையும் தாண்டி எப்படி தங்கள் காதல் வாழ்விலும் பயணிக்கிறார்கள் என்பதே படத்தின் ஒரு வரிக்கதை.
காதலையும், தேசப்பற்றையும் இணைத்துச் சொல்லும் இந்தப் படத்தில் வளர்ந்து வரும் கன்னட நடிகர் சந்தன் குமார், ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சுஹாசினி, கே.விஸ்வநாத் ஆகியோரும் நடிக்கிறார்கள். நான் கடவுள் ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபுவின் காமெடி கூட்டணி படத்தை கலகலப்பாக்குகிறது. ஜெஸ்சி கிப்ட் இசை அமைக்கிறார். வேணுகோபால் ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னை, தர்மஸாலா, ஐதராபாத், கேரளா மற்றும் வட நாடுகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது பின்னணி இசைகோர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. வருகிற தீபாவளி அன்று படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment