Ads (728x90)

அமெரிக்காவில் கடந்த 12 வருடகாலமும் காணாத பெரும்  புயல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை நேற்று தாக்கியுள்ளது.
மணிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் நேற்று இரவு இலங்கை நேரப்படி 11 மணியளவில் அரன்சாஸ் மற்றும் ஓகோன்னோர் துறைமுகங்களுக்கிடையே டெக்சாஸ் மாநிலத்தின் தென்பகுதியை ஹார்வே புயல் தாக்கியுள்ளது.

பலத்த மழையுடன் கூடிய ஹார்வே புயலால் மரங்கள் முறிந்து விழுந்து கட்டிடங்களை சேதப்படுத்தியுள்ள காரணத்தால் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
வீதிகளில் விழுந்த கிடக்கும் மரங்களையும் கட்டிட இடிபாடுகளுக்குள்   சிக்கியிருக்கும்  மக்களை மீட்கும் பணியில் அந் நாட்டு மீட்பு படையினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.
அதிகாலையில் புயல் மாநிலத்தை விட்டு கடந்த போதிலும் மழை தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது.

பெய்து கொண்டிருக்கும் கனத்த மழையானது எதிர் வரும் புதன் கிழமை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget