தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். முதன்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான இசையமைத்துள்ளார். சமந்தா, காஜல்அகர்வால், நித்யாமேனன், வடிவேலு, சத்யன், யோகிபாபு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தீபாவளிக்கு மெர்சல் வெளியாவது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனபோதும், தீபாவளிக்கு நெஞ்சில் துணிவிருந்தால், குலேபகாவலி, சொல்லி விடவா, ஹரஹர மகாதேவகி என மெர்சல் படத்தோடு சேர்த்து 5 படங்கள் திரைக்கு வர தயாராக இருப்பதாக சம்பந்தப்பட்ட பட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஆனபோதும், கெளதம் கார்த்தியின் ஹரஹர மகாதேவகி, அர்ஜூன் இயக்கியுள்ள சொல்லிவிடவா ஆகிய படங்களை தீபாவளிக்கு ரேஸில் இறக்கி விட வேண்டாம் என்று சிலர் வலியுறுத்தி வருகிறார்களாம். இருப்பினும், தங்களது படங்களின் மீதுள்ள நம்பிக்கையில் உறுதியாக தாங்கள் தீபாவளிக்கு களம் காண போவதாக அப்பட நிறுவனங்கள் கூறிவருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment