Ads (728x90)

நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட டோரா படம் வணிகரீதியில் தோல்வியடைந்ததால், டோராவைப்போலவே நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அறம், கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் வெளிவர முடியாமல் சிக்கலுக்குள்ளாகி உள்ளன.

இதற்கிடையில், வழக்கமான கதாநாயகி வேடங்களில் வேலைக்காரன், தெலுங்கில் 'சய்ரா நரசிம்ம ரெட்டி', ஆறடுகுல புல்லட் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில், அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'கோ கோ' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் நயன்தாரா என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.

'கோலமாவு கோகிலா' என்பதன் சுருக்கமாக 'கோ கோ' என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தில் நடிக்க நயன்தாராவை அப்ரோச் பண்ணியபோது கதையைக் கூட கேட்காமல் முதலில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

சில வாரங்களுக்குப் பிறகு இந்தக்கதையை லைகா புரொடக்ஷன்ஸ் ஓகே பண்ணியதும் மீண்டும் நயன்தாராவை அணுகியுள்ளார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்ற விஷயத்தைச் சொல்லி அணுகியதும் உடனே கதையைக் கேட்டிருக்கிறார் நயன்தாரா. அதுமட்டுமல்ல கதை ஓகே என்று சொல்லி நடிக்க சம்மதம் சொன்னவர் பெரிய சம்பளத்தை கேட்டிருக்கிறார். அதற்கு லைகா ஓகே சொன்னதால் உடனே கால்ஷீட் தர முன்வந்தாராம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget