பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 3 நாள் பயணமாக இந்தியாவில் பெங்களுருக்கு உத்தியோகப்பூர்வமாக சென்றுள்ளார். இந்நிலையில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் நடக்கும் பூஜையில் நேற்று 11 மணிக்கு கலந்துக்கொள்வதாக இருந்த நிலையில் கொல்லூர் ஸ்ரீபூர் பிந்தூர் ஆகிய பிரதேசங்களில் கடும் மழை பெய்தமையால் பெங்களுரிலிருந்து விமானம் மூலமாக செல்வது கடினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குடும்பத்தினருடன் விமானம் மூலம் பெங்களுருக்கு சென்றிருந்தார். தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அவர், நேற்று நடந்த எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தங்கியிருக்கும் ஹோட்டல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து அவர் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment