தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதியளவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மத்திய நிலையங்கள் 40 இல் இடம் பெறவுள்ள மதிப்பீட்டுப் பணிகளில் 384 குழுக்களூடாக ஆறாயிரத்து 965 ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
எனவே மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் பரீட்சை முடிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதியளவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
மேலும் இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தனர்.இதேவேளை பரீட்சைக் கடமைகளில் 28 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment