Ads (728x90)

ஊழல் அற்ற அரசை உருவாக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம்.  இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய இராஜகோபுர அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவா் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் இரட்டைவேட அரசியல் செய்பவர்கள் அல்ல, இவ்வாறு இரட்டை வேடத்தில் அரசியல் செய்ய முற்பட்டால் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்பது கடந்த கால வரலாறாகும்.
இலஞ்சம், ஊழல் அற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget