அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத் தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
விஜேதாஸ ராஜபக் ஷ நீதி மன்ற மற் றும் சட்டமா அதிபர் திணைக்கள நடவடிக்கைகளில் தலையிடாததனால் அவர் அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் புதிய நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள இந்த விடயங்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டுதான் நீதி அமைச்சுப்பதவியை ஏற்றுக்கொண்டுள்ளாரா என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். விஜேதாஸ ராஜபக் ஷ நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட் டாரா என்பதை நீதிமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கமரா மூலம் அறிந்துகொள்ளலாம்.
மேலும் விஜேதாஸவின் விலகலுடன் ராஜபக் ஷ குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். அதனால்தான் தலதா அத்துகோரளவின் நடவடிக்கைகளை மிகவும் அவதானமாக கண்காணிப்பதாக மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய நீதி அமைச்சர் இன்னும் தனது பதவியை பொறுப்பேற்கவில்லை. ஆனால் தல தாவின் நியமனத்துடன் மஹிந்தவுடன் இருக்கும் சில மோசடிக் காரர்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னாலும் வரிசையில் இருக்கின்றனர்.
அத்துடன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் செய்தியாளர் மாநாட்டை குழப்பியமைக்கெதிராக ஞானசார தேரருக்கு நீதி மன்றத்தில் உடனடியாக பிணைவழங்கப்பட்டது. ஆனால் தற்போது விஜேதாஸ ராஜபக் ஷ நீக்கப்பட்டதும் ஞானசார தேரர் நாட்டில் இல்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மஹிந்த ராஜபக் ஷ அன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.அதற்கு உபகாரமாகவே மஹிந்த ராஜபக் ஷ குடும்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஐக்கிய தேசிய கட்சி பாதுகாத்து வருகின்றது என்றார்.
Post a Comment