பிரேசிலுக்கான இலங்கைத்தூதுவர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியாவுக்கு எதிராக பிரேசிலில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது வன்னிப்பகுதியில் இராணுவத்திற்கு தலைமை வகித்த, இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிரேசில் நாட்டிற்கான தூதுவராகவுள்ளார். அது மட்டுமின்றி கொலம்பியா, பெரு, ஆர்ஜென்டீனா, சிலி உட்பட ஐந்து நாடுகளில் அவருக்கு இராஜதந்திர பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவரது காலப்பகுதியில் சித்திரவதைக்கு உள்ளான 14 பேர் வழங்கிய சாட்சிகள் அடிப்படையில், சர்வதேச உண்மை மற்றும் சமாதானத்திற்கான திட்ட அமைப்பு தென் அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றின் ஊடாக, பிரேசிலில் அவருக்கு எதிராக வழக்கொன்ளை தாக்கல் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, உடனடியாக பிரேசில் தூதுவரான ஜெகத் ஜெயசூரிய தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்து இந்த வழக்கில் ஆஜரான, சட்டத்தரணி கார்லஸ் கஸ்ரெஸ்னா பெர்னாண்டஸ் கருத்து தெரிவிக்கிக்கையில்,
"இது ஒரு மறக்கப்பட்ட இனப்படுகொலை" எனவும் "இந்த வழக்கு ஒரு ஆரம்பம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.
இந்த முயற்சியில் பெரும் பங்கு வகித்த, ஐ.நா. முன்னாள் நிபுணர் ஜஸ்மின் சூகா மற்றும் ஊடகவியலாளரான பிரான்சிஸ் கரிசன் ஆகியோர், இது போன்ற வழக்குகள் சிலி, பெரு மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளிலும் தொடரும் என தெரிவித்துள்னர்.
இதனிடையே இந்த முயற்சிகளை ஒருக்கிணைத்து வரும் மனித உரிமை சட்டத்தரணியாகிய கீத் குலசேகரம், இந்த வழக்கை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு முன்னெடுத்து செல்லவுள்ளதாக தெரிவிதுள்ளார்.
Post a Comment