Ads (728x90)

கடற்படையினரே புங்குடுதீவு மாணவியை வன்கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்துள்ளனர் என்று தீர்ப்பாயத்தில் தெரிவித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான ம.சசீந்திரன். இவர் இந்தக் கொலை வழக்கின் மற்றோரு சந்தேகநபரான சுவிஸ்குமாரின் தம்பியாவார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணை செய்யப்படுகின்றது. வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில்  எதிரித் தரப்பினரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில்  சாட்சியமளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
சாரதாம்பாள், தர்சினி கொல்லப்பட்ட சம்பவங்களில் கடற்படையினர் ஏற்கனவே இவ்வாறு செய்துள்ளனர். இந்தக் கொலையும் கடற்படையினரே செய்துள்ளனர். அதை மறைக்கவே எம்மைக் கைது செய்துள்ளனர். ஊர் முழுக்க அறிவித்து எமக்கு எதிரான எண்ணப்பாட்டை உருவாக்கிவிட்டனர்.
சமூக வலைத் தளங்களிலும், ஊடகங்களிலும் எமது படங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளனர். அதனால் எங்கள் குடும்பம் நஞ்சருந்தி இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நாம் இந்தக் குற்றத்தைச் செய்யததாலேயே உயிரோடு இருக்கின்றோம் என்று அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget