உள்ளூராட்சித் தேர்தல்கள், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் தள்ளி போவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் தெரிவிக்கின்றது.
டிசெம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற, கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைகளை கவனத்தில் கொண்டே, உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில், ஆணைக்குழு கலந்தாலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலான சட்டமூலம், நாடாளுமன்றத்தில் கடந்த வௌ்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
அது தொடர்பிலான ஆவணங்கள், செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவுக்கு கிடைத்தால், சாதாரணத்தரப் பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் தேர்தல்களை நடத்தலாம்.
எவ்வாறாயினும், சட்டமும் அவை தொடர்பிலான ஆவணங்களும், கிடைத்த 75 நாட்களுக்குப் பின்னரே, தேர்தல்களை நடத்தமுடியும் என்றும் அவ்வாணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஏற்கனவே அறிவித்திருந்தார்.
பரீட்சார்த்திகளைக் கவனத்தில் கொண்டு, 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தேர்தலை நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு கலந்தாலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.
Post a Comment