Ads (728x90)

நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் தலதா அத்துகோரள இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
அமைச்சர் தலதா அத்துகோரள இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் நீதியமைச்சராவார்.
நீதியமைச்சராக முன்னர் பதவி வகித்த விஜேதாச ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. அதையடுத்து அவரை பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் தலைமை அமைச்சர் விக்ரமசிங்க அரச தலைவரிடம் கோரிக்கையை முன் வைத்ததைத் தொடர்ந்து இவர் அனைத்து அமைச்சு பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அவர் வகித்த நீதியமைச்சர் பதவிக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவும், புத்தசாசன அமைச்சராக காமினி ஜெயவிக்ரம பெரேராவும் நியமிக்கப்பட்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget