கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னைய்யா மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோருக்கிடையே நேற்று சந்திப்பு நடந்துள்ளது.
விமானப்படை தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
விமான படையின் கொழும்பு முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் வருனு குணவர்தன மூலம் சம்பிரதாய முறைப்படி கடற்படை தளபதி வரவேற்கப்பட்டார்.
சந்திப்பின் இறுதியில் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன

Post a Comment