ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, வருடத்தின் சிறந்த வீரரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பிக்கும். இந்த வருடத்தின் தலைசிறந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார்.
கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் போர்த்துக்கல் அணித் தலைவரும், ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான ரொனால்டோவுக்கு முக்கிய இடம் உண்டு.
இந்த வருடம் தனது சிறப்பான ஆட்டத்தினால் ரியல் மாட்ரிட் அணியை தொடர்ந்து இரண்டாவது முறையாக சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தைக் கைப்பற்ற வைத்தார்.
இந்த தொடரில் மட்டும் அவர் 12 கோல்கள் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் ஆர்ஜன்டீனா மற்றும் பார்சிலோனா அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான மெஸ்ஸியும் இருந்தார். இருந்தாலும் ரொனால்டோ, மெஸ்ஸியை வீழ்த்தி மூன்றாவது முறையாக விருதினை வென்றார். மெஸ்ஸி இந்த விருதினை இரு முறை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment