Ads (728x90)

தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அறி­யா­துள்ள அவர்­களின் உற­வி­னர்­க­ளுக்­கான நீதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுக்­கவும் அர­சாங்கம் வழங்­கிய உறுதி மொழி­களை நிறை­வேற்­றவும் சர்­வ­தேசம் உடன் கவ­னத்தில் கொண்டு தலை­யீட்டைச் செய்­ய­வேண்­டு­மென எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

பல­வந்­த­மாக காணா­ம­லாக்க  செய்­த­லினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளது சர்­வ­தேச தினத்­தினை முன்­னிட்டு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 
அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 
மனக் கவ­லை­க­ளோடும் துய­ரத்­தோடும் பல­வந்­த­மாகக் காணாமல் போகச் செய்­த­லினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளது இன்­னு­மொரு சர்­வ­தேச தினத்தை நாம் எதிர்­கொள்­கிறோம்.  பல­வந்­த­மாக அல்­லது சுய விருப்­பத்­திற்கு எதி­ராகக் காணாமல் போகச் செய்­த­லினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் ஆயிரக் கணக்­கானோர் இந்த நாட்டில் உள்­ளனர்.
கடந்த பல வரு­டங்­க­ளாக காணாமல் போகச் செய்­த­லினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் நாட்டின் பல பாகங்­க­ளிலும் குறிப்­பாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் அமைதி வழியில் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தி வந்­துள்­ளனர்.  தொடர்ந்தும் அத்­த­கைய ஆர்ப்­பாட்­டங்­களைச் செய்து வரு­கின்­றனர்.  
அவர்கள் கோரு­வ­தெல்லாம், தங்­களின் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதன் உண்­மை­களைக் கண்­ட­றிய வேண்­டு­மென்­ப­தே­யாகும்.  ஆயுதக் கல­வ­ரங்கள் முடி­வுக்கு வந்து ஆண்­டுகள் எட்டு கடந்து விட்­ட­போதும் காணாமல் போகச் செய்­யப்­பட்­ட­வர்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் இது­வரை திருப்­தி­க­ர­மான வகையில் கவனம் செலுத்­தப்­ப­டாத நிலையே இருந்து வரு­கின்­றது.  
உலகின் பல்­வேறு பாகங்­க­ளிலும் இது மிக மோச­மான பிரச்­சி­னை­யாக உரு­வாகி வரு­வ­தாக அங்­கத்­துவ நாடுகள் உணர்ந்­து­கொண்­ட­தை­ய­டுத்து 2010ஆம் ஆண்டில் ஐக்­கிய நாடு­களின் பொதுச் சபை தனது தீர்­மானம் ஒன்­றி­னூ­டாக இப்­பி­ரச்­சி­னைகள் தொடர்­பாகத் தனது கவ­னத்தைச் செலுத்­தி­யி­ருந்­தது.  இலங்­கையில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் பல வரு­டங்­க­ளாகத் தமது அன்­பா­ன­வர்கள் பற்­றிய உண்மை நிலையை அறிய முடி­யா­த­வர்­க­ளா­கவும் நீதி மறுக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவும் தொடர்ந்தும் இருந்து வரும் நிலைமை கவலை தரு­வ­தாக உள்­ளமை கவ­னிக்­கத்­தக்­கது.
இந்த விடயம் தொடர்­பாக தனது உயர்ந்­த­பட்ச கவ­னத்தைச் செலுத்­து­மாறு நாம் அர­சாங்­கத்தைக் கேட்டுக் கொள்­கிறோம்.  படை­யி­ன­ரிடம் தங்­களால் கைய­ளிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அல்­லது கடத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு அல்­லது காணாமல் போன­வர்­க­ளுக்கு உண்­மையில் என்ன நடந்­தது என்­பது மக்­க­ளுக்குத் தெரி­ய­வர வேண்டும்;  அது அவர்­க­ளது உரிமை.  
இந்த அடிப்­படை உரி­மையைக் கவ­னத்திற் கொள்­ளாமல் விட­மு­டி­யாது.  மேலும், குற்றம் செய்­த­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்திப் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியா­யத்தைப் பெற்றுக் கொடுப்­ப­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு நாங்கள் அர­சாங்­கத்தைக் கேட்­டுக்­கொள்­வ­தோடு, இந்த நாட்டில் எதிர்­கா­லத்­திலும் இத்­த­கைய பல­வந்­த­மாகக் காணாமல் போகச் செய்தல் இடம்­பெ­றாது நிறுத்தப்படுவதையும் உறுதி செய்யுமாறும் கோருகிறோம்.
இந்த நாட்டில், பலவந்தமாக அல் லது சுய விருப்பத்திற்கு மாறாகக் காணாமல் போகச் செய்யப்பட்ட செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும், சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிகளைச் செயற்படுத்துவதனை யும் உறுதிசெய்யுமாறும் நாம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றுள்ளது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget