இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சேஸ் செய்த இந்திய அணி 61 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ரோகித் ஷர்மா - டோனி ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது.
இவர்களின் உறுதியான போராட்டத்தால், வெற்றி இந்திய அணியின் பக்கம் வந்ததை இலங்கை ரசிகர்களால் பொறுக்க முடியவில்லை. தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்க ஆட்டம் நிறுத்தப்பட்டது.
களத்தின் நடுவே காத்திருந்த டோனி, அப்படியே குப்புறப் படுத்து ஒரு குட்டித் தூக்கம் போட்டார். இந்த புகைப்படம் ட்விட்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment