அமெரிக்காவில் 80 ஆண்டுகளுக்கு முன்பே ஏழைகளின் கைகளில் அதிநவீன ஸ்மார்ட்போன்கள் இருந்தது போன்ற ஆதாரம் கிடைத்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் ஸ்மார்ட் செல்போன்கள் பயன்பாட்டுக்கு வந்ததாக அதன் வரலாறு கூறுகிறது. ஆனால், அமெரிக்காவில் 80 ஆண்டுகளுக்கு சாதாரண ஏழை மக்களின் கைகளில் கூட இந்த செல்போன்கள் இருந்தது போன்ற ஆதாரம், ஒரு சுவர் ஓவியத்தின் மூலம் கிடைத்துள்ளது.
‘மதர்போர்டு’ என்ற ஆன்லைன் பத்திரிகை இந்த சுவாரசிய தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பிரங்பீல்டு நகரத்தில் அம்பெர்டோ ரோமனோ என்ற ஓவியர் 1937ம் ஆண்டில் வரைந்துள்ள சுவர் ஓவியம், அங்குள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த ஓவியத்தில் ஸ்பிரிங்பீல்டு நகரத்தை உருவாக்கிய வில்லியம் பைன்ஜன் இளஞ்சிவப்பு நிற கோட் அணிந்து ஒரு இடத்தில் அமர்–்ந்திருக்கிறார்.
அவருக்கு கீழே சட்டை கூட அணியாமல் அமர்ந்துள்ள உள்ளூர் அமெரிக்கர் ஒருவரின் கையில் ஸ்மார்ட்போன் போன்றதொரு சாதனம் இருக்கிறது. அவர் அந்த செல்போன் மூலம் தன்னை ‘செல்பி’ எடுப்பதுபோல் ஓவியம் உள்ளது. ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக், கடந்தாண்டு ஆம்ஸ்டெர்டாமில் உள்ள உலக புகழ்பெற்ற ரிஜிக்ஸ் அருங்காட்சியகத்துக்கு, ஐரோப்பியாவின் முன்னாள் ஆணையர் நீலி குரோசுடன் சென்று பார்வையிட்டார்.
அங்குள்ள ஓவியங்களை பார்த்து கொண்டே சென்ற குக், ஒரு ஓவியத்தின் அருகில் சட்டென்று நின்றார். அது 17ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியம். அந்த ஓவியத்தில் பெண் ஒருவரின் கையில் இப்போதைய ‘ஐபோன்’ மாடலில் செல்போன் இருப்பதை கண்டு, குக் ஆச்சர்யப்பட்டார். இந்த ஓவியத்தை பெய்ட்டர் டி ஹூச் என்பவர் வரைந்திருக்கிறார்.
அப்போது, ‘என்ன குக்? ஐபோன் எங்கு, எப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று தெரிகிறதா?’ என்று நீலி கிண்டலாக கேட்டார். அதற்கு பதிலளித்த குக், ’இதை நம்பவே முடியவில்லை. சத்தியமாக அது ஐபோன் தான்’ என்று கூறியதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment