Ads (728x90)

இங்கிலாந்து தலைநகரம் லண்டனில் தேம்ஸ் நதிக்கரை அருகே நாடாளுமன்ற கட்டிடம் உள்ளது. கடந்த மார்ச்சில் தேம்ஸ் நதியில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் பாலத்தின் வழியாக காரில் வேகமாக வந்த காலித் மசூத் என்ற தீவிரவாதி, நாடாளுமன்ற கட்டிடத்தில் நுழைய முயன்றான். அவனை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற ஊழியர்கள் 15 ஆயிரம் பேருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்ைட வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேம்ஸ் நதி பகுதியில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்துக்கு  பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதும் கண்டறியப்பட்டது. தேம்ஸ் நதி மூலமாக படகில் வரும் தீவிரவாதிகள், ஒரே நேரத்தில் 100 எம்பி.க்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், தேம்ஸ் நதி பகுதியில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய வீரர்களின் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget