ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த ஆறு உறுப்பினர்களுடைய கட்சி உறுப்புரிமையை நீக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களும் தற்போதைய கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கின்ற நிலையிலேயே இவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களாக பவித்திராதேவி வன்னியாராச்சி, றோஹித அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, சனத் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்தே ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாமலும் அவற்றை பொருட்படுத்தாமலும் விதிகளுக்கு முரணான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமையுமே இவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையை இழக்கும் போது அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமையும் இரத்தாகும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேநேரம் மேற்படி ஆறுபேரின் வெற்றிடங்களுக்கு விரைவில் புதியவர்கள் அமர்த்தப்படுவார்கள் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment