மேல்மாகாண சபையில் 20ம் அரசியலமைப்புச் சட்ட திருத்தங்கள் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சபையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
20ம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு வாக்களிக்க முன்னர், அது தொடர்பில் மீளவும் கலந்துரையாடுவதே சிறந்தது என முதலமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் சில உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டபோது சபையில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, சில உறுப்பினர்கள் செங்கோலினை கைப்பற்ற முயற்சிகையில் செங்கோல் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment