கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியானது தனி ஒருவன். ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் மோகன்ராஜா இயக்கினார். கல்பாத்தி அகோரம் தயாரித்தார். தனி ஒருவன் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி படத்தின் நீளம் கருதி நீக்கப்பட்ட 8 நிமிட நேரம் ஓடும் 3 காட்சிகளை நேற்று மோகன்ராஜா வெளியிட்டார்.
முதல் காட்சி: கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் உடம்பில் இருந்து எஸ்டி கார்டை எடுக்க ஜெயம்ரவி நயன்தாரா மூலம் திட்டமிடுவதை அறிந்து கொள்ளும் அரவிந்த்சாமி போலியான எஸ்டி கார்டை கொடுக்கச் செய்து ஏமாற்றுகிறார்.
இரண்டாவது காட்சி: அரவிந்த் சாமியின் பிளாஷ்பேக். பள்ளியிலிருந்து வரும் அரவிந்த் சாமி தன் தந்தை தம்பி ராமய்யாவிடம் ஒரு சமோசா வாங்கி கேட்கிறார். அவர் மறுக்க... அங்கு வரும் இன்னொரு மாணவனை சசோசாவை திருட வைத்து அவனை காட்டிக் கொடுத்து இவர் புத்திசாலித்தனமாக திருடுகிறார். திருடுனா ரோட்ல போட்டு அடிப்பாங்கடான்னு அப்பா சொல்ல, இப்ப நான் பண்ணினதுக்கு அடிச்சாங்களா. அப்போ இது திருட்டு இல்லை. என்கிறார்.
மூன்றாவது காட்சி: போலீஸ் அகாடமியில் தமிழ் டே என்ற விழா நடக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் தமிழ் நாட்டை புகழ்ந்து பேசுகிறார்கள். ஒரு மாணவர் எழுந்து "இலங்கையில் உங்கள் இனம் அழிந்தபோது பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள்?" என்று கேட்கிறார். அதற்கு ஜெயம்ரவி" நாங்க பண்ணினது தப்புதான். இப்போ தமிழர்கள் மாறிட்டு வர்றாங்க. மாணவர்கள் மனதில் ஒரு போராளி இருக்கிறான்" என்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment