Ads (728x90)

அமெரிக்க நகரங்களில் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டு ஒன் ஹார்ட் என்ற திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு சினிமாவுக்கான திரைக்கதை போன்று அமைக்கப்பட்டு இந்த படம் உருவாகியுள்ளது. இது ஹாலிவுட் பாணியிலான ரியல் சினிமா. இந்தப் படம் நாளை(ஆகஸ்ட் 29-ம் தேதி) மலேசியாவில் திரையிடப்படுகிறது. இதுகுறித்து படத்தின் மலேசிய உரிமம் பெற்றுள்ள மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரேஷன் தலைவர் மாலிக் கூறியதாவது:

ஹாலிவுட்டில் கான்சர்ட் ஜேனர் வகையிலான படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் உருவாகியிருக்கும் முதல் படம் 'ஒன் ஹார்ட்'. இதில் ஏ.ஆர்.ரஹ்மானும் அவருடன் இணைந்து பணியாற்றுபவர்களும் நடித்திருக்கிறார்கள். தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த ஒன் ஹார்ட், ஆகஸ்ட் 30-ஆம் தேதியன்று மலேசியாவில் வெளியாகிறது.

மலேசியாவில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது. ரகுமான் படம் என்பதால் அதனை ஆடிப்பாடி கொண்டாடத்துடன் பார்க்க மலேசிய மக்கள் விரும்பினார்கள். அதனால் படம் வெளியாகும் அன்று 20 ஆயிரம் ரசிகர்கள் பார்க்கும் வகையில் திறந்த வெளி திரையரங்கிலும் திரையிடப்படுகிறது என்கிறார் மாலிக். இந்த படம் இந்தியா முழுவதும் செப்டம்பர் 7-ஆம் தேதியன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget