Ads (728x90)

அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா அதன் பின் அவரது சொந்த ஊரான கொச்சினுக்கு சென்றுவிட்டார். சில படங்களில் நடிக்கப்போவதாகவும் அறிவித்தார். அந்நிலையில், கடந்த 28ம் தேதி தன்னுடைய டிவிட்டரில் பக்கத்தில் அவர் ஒரு டிவிட் செய்திருந்தார். 
அதில் “என் மீது நீங்கள் காட்டிய அன்பையும், அக்கறையையும் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார். 
இந்த டிவிட்டை போட்ட 24 மணிநேரத்தில்,  இதுவரை 46 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். அதேபோல் 13 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்துள்ளனர். மேலும், 8 ஆயிரம் பேருக்கு மேல் கமெண்ட் செய்துள்ளனர்.
அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் 2.0 பட மேக்கிங் வீடியோவை கடந்த 25ம் தேதி பதிவு செய்திருந்தார். 4 நாட்களை கடந்த நிலையில் அந்த பதிவை 28 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 8 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்துள்ளனர்.  2 ஆயிரம் பேர் மட்டுமே கமெண்ட் செய்துள்ளனர்.
இதன் மூலம், ரஜினிகாந்தை விட ஓவியாவிற்கு மவுசு கூடியுள்ளது நிரூபணமாகியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget