Ads (728x90)

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அடிக்கடி ஏதாவது ஒரு மாற்றத்தை செய்து கொண்டே வருகிறார்கள். ரசிகர்கள் அது பற்றி கேள்வி கேட்டால் இந்த நிகழ்ச்சி ஒரு 'சர்வதேச கான்செப்ட்', அதனால் அடிக்கடி எது வேண்டுமானாலும் நடக்கும் என அவர்களாகவே ஒரு விதியைக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால், போட்டியாளர்கள் மட்டும் கொஞ்சம் கூட விதி மீறலில் ஈடுபடக் கூடாது என இரட்டை வேடம் போடுகிறார்கள்.

15 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிகழ்ச்சியில் இதுவரை நேயர்களின் வாக்களிக்கும் முறை மூலம் அனுயா, ஆர்த்தி, கஞ்சா கருப்பு, ஜுலி, சக்தி, காயத்ரி, ரைசா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஆர்த்தி, ஜுலி மட்டும் நேற்று திடீரென வீட்டுக்குள் சென்றார்கள். நேற்று காலை முதல் விஜய் டிவி வெளியிட்ட புரோமோவில் அவர்கள் மீண்டும் போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ளார்கள் என்ற ரீதியில்தான் இருந்தது. அதற்கு நேயர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. வெளியேற்றுவதற்கு மட்டும் நாங்கள் வாக்களிக்க வேண்டும், திரும்ப வருவதற்கு நீங்களாகவே அனுமதிப்பீர்களா என சரமாரியாக கேள்வி கேட்டிருந்தார்கள்.

அதனால்தானோ என்னவோ, நேற்று நிகழ்ச்சியின் பாதியில் ஆர்த்தியும், ஜுலியும் உள்ளே நுழையும் போது 'பிக் பாஸ்' ஒரு வாரம் மட்டும் அவர்கள் விருந்தினர்களாக மீண்டும் வந்துள்ளார்கள் என்று சொல்லி, நேயர்களின் கோபத்தைத் தணித்தார். அப்போதும் கூட ஜுலி, நான் இன்று ஒரு நாள் மட்டுமே இருப்பேன் என பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தார்.

புதிய போட்டியாளர்களான சுஜா வருணி, காஜல், ஹரீஷ் ஆகியோரால் எந்தப் பிரச்சனையும் வராததால் பழைய போட்டியாளர்களான ஆர்த்தி, ஜுலியை விட்டு ஏதோ ஒரு கலகத்தை பிக் பாஸ் நடத்தத் தயாராகி வருகிறார் என்பது மட்டும் புரிகிறது. நேற்றே, ஜுலி, அண்ணன் என்றாலும் தப்புன்னா தப்புதான் என டயலாக் பேசி அதற்கு ஒரு டிரைலரையும் விட்டுவிட்டார்.

பிக் பாஸின் நாடகம் சிறப்பாக அரங்கேறுமா அல்லது சிதறிப் போகுமா என்பது இன்று தெரியும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget