அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல், சிங்கப்பூருக்கு அருகே எண்ணெய் கப்பல் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 10 மாலுமிகள் மாயமாகி உள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.கடந்த 2 மாதங்களில் ஆசிய கடல்பகுதியில் அமெரிக்க கப்பற்படை கப்பல் விபத்திற்குள்ளாவது இது 2வது முறையாகும்.
சிங்கப்பூர் துறைமுகத்தை வழக்கம் போல் கடந்து செல்ல முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த விபத்து தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இறந்தவர்களுக்கு தனது இரங்கலையும், காயமடைந்தவர்களுக்கு தனது பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். மாயமான மாலுமிகளை தேடும் பணி நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment