முழு அளவிலான சூரிய கிரணம் இன்று (ஆக.,21) பிற்பகல் நிகழ்கிறது. இதனை 30 கோடி பேர் கண்டு ரசிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த சூரிய கிரணம் முழு அளவில் தெரியும்.சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் கடந்து செல்லும் போது சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுவதால் ஒரு நிமிடம், 36 விநாடிகளுக்கு பூமியில் இருள் சூழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காலை, 9 மணி முதல், பகல், 2.30 மணி வரை சூரிய கிரகண நிகழ்வு இருக்கும். இதனை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த சூரிய கிரணத்தின் போது வனவிலங்குகளிடம் மாற்றம் தென்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வனவிலங்கு பூங்காக்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இலங்கை, இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரிய வாய்ப்பு இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment