Ads (728x90)

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனான உபுல் தரங்காவுக்கு 2 ஒருநாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த அணியின் கேப்டனாக கபுகேதரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின்போது இலங்கை அணி குறித்த நேரத்துக்குள் ஓவர்களை வீசாததால் அந்த அணியின் கேப்டன் உபுல் தரங்கா 2 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு இதுபோன்று தடை விதிக்கப்படுவது 2-வது முறையாகும். முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது அவருக்கு இதே காரணத்துக்காக தடை விதிக்கப்பட்டது.

தினேஷ் சந்திமால்

தரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அணியின் கேப்டனாக சமரா கபுகேதரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ள இலங்கை அணியில் தினேஷ் சந்திமால், லஹிரு திருமன்னே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் தினேஷ் சந்திமால், அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget